என் மலர்

  செய்திகள்

  சபரிமலை
  X
  சபரிமலை

  சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு 17-ந் தேதி நடக்கிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  2021-2022-ம் ஆண்டுக்கான புதிய மேல் சாந்தி குலுக்கல் மூலம் அடுத்தமாதம் 17-ந்தேதி தேர்வு செய்யப்பட உள்ளார். இதே போல் மாளிகப்புரம் கோவிலுக்கும் மேல் சாந்தி நியமிக்கப்படுகிறார்.
  திருவனந்தபுரம் :

  சபரிமலை ஐயப்பன் கோவிலில் புரட்டாசி மாத பூஜையையொட்டி கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் வழக்கமான பூஜை, வழிபாடுகள் 5 நாட்கள் நடைபெற்றது.

  நிறைவு நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் அங்க பிரதட்சணம் நடத்தி வழிபாடு நடத்தினர். அதைத்தொடர்ந்து இரவில் கோவில் நடை சாத்தப்பட்டது.

  சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மேல்சாந்தி நியமிக்கப்படுவது வழக்கம். அதன்படி 2021-2022-ம் ஆண்டுக்கான புதிய மேல் சாந்தி குலுக்கல் மூலம் அடுத்தமாதம் 17-ந்தேதி தேர்வு செய்யப்பட உள்ளார். இதே போல் மாளிகப்புரம் கோவிலுக்கும் மேல் சாந்தி நியமிக்கப்படுகிறார்.

  இதற்காக 9 பேர் வீதம் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் ஒருவர் சபரிமலை ஐயப்பன் கோவில் மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கு மேல் சாந்திகளாக தேர்வு செய்யப்படுவார்கள்.

  ஐப்பசி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்தமாதம் 16-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். மறுநாள் காலை 8 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி, திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் வாசு மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில், சன்னிதானத்தில் வைத்து, புதிய மேல்சாந்திகள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

  தேர்வு செய்யப்படும் மேல்சாந்திகள் நவம்பர் 17-ந் தேதி (கார்த்திகை- 1) பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள். இவர்களது பணிக் காலம் ஒரு ஆண்டுஆகும். ஐப்பசி மாத பூஜையையொட்டி அடுத்தமாதம் 17-ந் தேதி முதல் 21- ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
  Next Story
  ×