என் மலர்

  செய்திகள்

  ஆஸ்கர் பெர்னாண்டஸ்
  X
  ஆஸ்கர் பெர்னாண்டஸ்

  ஆஸ்கர் பெர்னாண்டஸ் மறைவு- பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்கர் பெர்னாண்டஸ் மறைவு தனக்கு தனிப்பட்ட இழப்பு என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
  புதுடெல்லி:

  மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் (வயது 80) இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். 

  பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘மாநிலங்களவை உறுப்பினர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் மறைவை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.  இந்த சோகமான தருணத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது ஆறுதலையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்', என்று குறிப்பிட்டுள்ளார்.

  பிரதமர் மோடி

  ஆஸ்கர் பெர்னாண்டஸ் மறைவு தனக்கு தனிப்பட்ட இழப்பு என்றும், அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் உள்ள பலருக்கு ஆஸ்கார் பெர்னாண்டஸ் வழிகாட்டியாக இருந்தார். அவரது பங்களிப்புகளுக்காக அவர் என்றும் நினைவுகூரப்படுவார் என்றும் ராகுல் கூறி உள்ளார்.
  Next Story
  ×