search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் - பிரதமர் மோடி
    X
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் - பிரதமர் மோடி

    இந்திய ஆக்கி அணிக்கு ஜனாதிபதி-பிரதமர் வாழ்த்து

    இந்திய ஆக்கி அணிக்கு பல்வேறு பிரபலங்கள், மற்ற விளையாட்டு வீரர்கள் என அனைத்து தரப்பில் இருந்தும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் ஆக்கி அணிக்கு நாடு முழுவதும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிகிறது. இந்த வெண்கல பதக்கத்தால் நாடே குதூகலம் அடைந்துள்ளது.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்திய ஆக்கி அணிக்கு தெரிவித்துள்ள வாழ்த்து வருமாறு:-

    “41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற இந்திய ஆண்கள் ஆக்கி அணிக்கு வாழ்த்துகள். இந்திய வீரர்கள் மிகவும் திறமையுடன் விளையாடி வெற்றியை பெற்றது அவர்களது உறுதியை காட்டுகிறது.

    ஆக்கி சகாப்தத்தில் இது வரலாற்று வெற்றியாகும். இது விளையாட்டு வீரர்களை மேலும் ஊக்குவிக்கும்” என்றார்.

    பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    இது புதிய வரலாறு ஆகும். ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் பொறிக்கப்படும் நாளாகும்.

    வெண்கலப்பதக்கத்தை வென்று நாடு திரும்பும் இந்திய ஆண்கள் ஆக்கி அணிக்கு எனது வாழ்த்துகள். இந்த சாதனை மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களின் முழு நம்பிக்கையை அவர்கள் பெற்று உள்ளனர். நமது ஆக்கி அணியால் நாடு பெருமை கொள்கிறது.

    ராகுல் காந்தி

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    இந்திய ஆண்கள் ஆக்கி அணிக்கு பாராட்டுதலை தெரிவித்துக்கொள்கிறேன். இது ஒரு முக்கியமான தருணமாகும். உங்கள் சாதனைக்காக நாடு முழுவதும் பெருமை கொள்கிறது. இது ஒரு தகுதியான வெற்றியாகும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதேபோல பல்வேறு பிரபலங்கள், மற்ற விளையாட்டு வீரர்கள் என அனைத்து தரப்பில் இருந்தும் இந்திய ஆக்கி அணிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


    Next Story
    ×