search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய வீரர்கள்
    X
    இந்திய வீரர்கள்

    டெல்லி செங்கோட்டை சுதந்திர தின விழாவில் பங்கேற்க ஒலிம்பிக் வீரர்களுக்கு அழைப்பு

    புதிதாக பல விளையாட்டுகளில் முதன்முறையாக இந்திய வீரர்கள் தகுதி பெற்று ஒலிம்பிக்கில் பங்கேற்று இருப்பது பாராட்டுக்குரியது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
    புதுடெல்லி:

    டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 127 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதுவரை 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

    ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட வீரர்களை ஜப்பான் புறப்பட்டு செல்வதற்கு முன்பாக பிரதமர் நரேந்திரமோடி அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அடுத்ததாக அவர்கள் ஊர் திரும்பியதும் இரவு விருந்து அளிக்க இருக்கிறார்.

    ஒலிம்பிக் வீரர்களை கவுரவப்படுத்தும் வகையில் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திரதின விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட இருக்கிறது.

    பிரதமர் மோடி

    நேற்று அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற
    பிரதமர் நரேந்திரமோடி
    , ஒலிம்பிக் வீரர்களை வெகுவாக பாராட்டினார்.

    இந்திய வீரர்கள் மிகத் திறமையாக செயல்பட்டு புதிய அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார்கள். குறிப்பிட்ட வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுத்து சிறப்பான பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்படும்.

    கொரோனா பாதிப்பால் பிரச்சனைகள் இருந்த நிலையில் நமது வீரர்கள் சிறப்பாக பயிற்சியில் ஈடுபட்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.

    புதிதாக பல விளையாட்டுகளில் முதன்முறையாக இந்திய வீரர்கள் தகுதி பெற்று ஒலிம்பிக்கில் பங்கேற்று இருக்கிறார்கள். இது பாராட்டுக்குரியது என்றார்.


    Next Story
    ×