search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்வு முடிவை அறிந்துகொள்ளும் இணையதளம்
    X
    தேர்வு முடிவை அறிந்துகொள்ளும் இணையதளம்

    ஐசிஎஸ்இ 10ம் வகுப்பு, ஐஎஸ்சி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

    டெல்லி தேசிய தலைநகர பிராந்தியத்தில் ஐ.சி.எஸ்.இ 10ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    புதுடெல்லி:

    கொரோனா இரண்டாவது அலை அச்சுறுத்தல் காரணமாக பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. கடந்த ஏப்ரலில் நடைபெற இருந்த 10ம் வகுப்பு (ஐசிஎஸ்இ), 12ம் வகுப்பு (ஐஎஸ்சி) தேர்வுகளை சிஐஎஸ்சிஇ எனப்படும் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் ரத்து செய்து உத்தரவிட்டது. அகமதிப்பீட்டு தேர்வுகளின் முடிவுகளை கணக்கில் கொண்டு தேர்வு முடிவுகள் தயாரிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

    அதன்படி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஐசிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் ஐஎஸ்சி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சிலின் cisce.org அல்லது results.cisce.org ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.

    ஐசிஎஸ்இ தேர்வில் 99.98 சதவீத மாணவர்களும், ஐஎஸ்சி தேர்வில் 99.76 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். டெல்லி தேசிய தலைநகர பிராந்தியம் (என்.சி.ஆர்) ஐ.சி.எஸ்.இ தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

    டெல்லியில் ஐ.எஸ்.சி. 12ம் வகுப்பு தேர்வில் 99.93 சதவீத தேர்ச்சி பதிவாகி உள்ளது.

    இந்த ஆண்டில், 2,909 மாணவர்களும், 2,554 மாணவிகளும் ஐ.சி.எஸ்.இ தேர்வு எழுதினர். ஐ.எஸ்.சி தேர்வைப் பொருத்தவரை, இந்த ஆண்டு 1,418 மாணவர்களும் 1,393 மாணவிகளும் பங்கேற்றனர்.
    Next Story
    ×