search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வகுப்பறை
    X
    வகுப்பறை

    ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அறிவித்தது அரசு

    கொரோனோ பரவல் காரணமாக பள்ளி இறுதித் தேர்வுகள் நடத்த முடியாததால், 10ஆம் வகுப்பு மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவித்து, மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது
    அமராவதி:

    ஆந்திராவில் 2021-22ம் கல்வியாண்டில் ஆகஸ்ட் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா 2வது அலை காரணமாக, பள்ளிகளை திறப்பது தாமதமான நிலையில், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

    புதிய கல்விக் கொள்கை-2020ஐ அமல்படுத்துவது குறித்து ஆகஸ்ட் 16ம் தேதி அரசாங்கம் விரிவான வழிகாட்டுதல்களை கொண்டு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாடு- நேடு திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளை முதல்வர் திறந்து வைக்க உள்ளார்.

    என்இபி-2020 திட்டத்தின் படி பள்ளிகளை பிபி-1 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆறு பிரிவுகளாக வகைப்படுத்த வேண்டும் என கல்வித் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

    என்இபி-2020 திட்டத்திற்காக மாநில அரசு ரூ.16,000 கோடியை செலவு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    கொரோனோ பரவல் காரணமாக பள்ளி இறுதித் தேர்வுகள் நடத்த முடியாததால், 2020-2021 ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவித்து, அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×