search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்னல்
    X
    மின்னல்

    உ.பி.-ராஜஸ்தானில் மின்னல் தாக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 60 ஆக உயர்வு

    மின்னல் தாக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் வாங்கப்படும் என்று உ.பி. நிவாரண ஆணையர் தெரிவித்தார்.
    லக்னோ:

    வட இந்தியாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இரண்டு மாநிலங்களிலும் மின்னல் தாக்கியதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள கோட்டை முன்பு நின்று செல்பி எடுத்தபோது இறந்த 11 பேரும் அடங்குவர். 

    இதுகுறித்து கேள்விப்பட்ட பிரதமர் மோடி தனது ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையை ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேச அரசுகள் அறிவித்துள்ளன. 

    இன்று மதிய நிலவரப்படி உத்தர பிரதேசத்தில் 16 மாவட்டங்களில் மின்னல் தாக்கி 41 பேர் இறந்ததாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வந்துள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் வாங்கப்படம் என்றும், காயமடைந்தவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என்றும் நிவாரண ஆணையர் தெரிவித்தார். மேலும் மின்னல் தாக்கியதில் 250 கால்நடைகள் இறந்ததாகவும், 20 கால்நடைகள் காயமடைந்ததாகவும் கூறினார். கால்நடைகளை இழந்தவர்களுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நிதி உதவியை அறிவித்துள்ளார்.
    Next Story
    ×