search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    டெல்டா வைரசால் இனி அதிக பாதிப்பு இருக்காது - மருத்துவ ஆய்வில் தகவல்

    அதிக பாதிப்புகள் உள்ள மாநிலங்களில் இருந்து டெல்டா பிளஸ் வைரசின் மாதிரிகளை சேகரித்து இந்திய கொரோனா மரபணு சோதனை அமைப்பு ஆய்வுகளை நடத்தியுள்ளது.

    புதுடெல்லி:

    கொரோனா 2-வது அலை தாக்குதலுக்கு உருமாற்றம் அடைந்த வைரசே காரணமாக அமைந்தது.

    டெல்டா என்று பெயரிடப்பட்ட இந்த வைரஸ் 2-முறை உருமாற்றத்தை பெற்றது. 2-வது முறையாக உருமாற்றமான டெல்டா பிளஸ் வைரஸ் 2-வது அலையில் அதிகம் பேரை பாதித்தது.

    இவ்வாறு அதிக பாதிப்புகள் உள்ள மாநிலங்களில் இருந்து டெல்டா பிளஸ் வைரசின் மாதிரிகளை சேகரித்து இந்திய கொரோனா மரபணு சோதனை அமைப்பு ஆய்வுகளை நடத்தியுள்ளது.

    இதன்படி மராட்டியம், தமிழ்நாடு, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், கேரளா, பஞ்சாப், குஜராத், ஒடிசா, ஆந்திரா, ராஜஸ்தான், சண்டிகார், காஷ்மீர், கர்நாடகா ஆகிய 13 மாநிலங்களில் 56 மாதிரிகளை பெற்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அதில் டெல்டா பிளஸ் வைரசின் வீரியம் குறைந்து வருவது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தன்மை அதிகரித்துள்ளது.

    இது டெல்டா பிளஸ் வைரசை எதிர்க்கொள்ளும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. எனவே டெல்டா பிளஸ் வைரஸ் இனி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று நிபுணர்கள் கூறினார்கள்.

    கடந்த மே மாதம் 10.31 ஆக இருந்த டெல்டா பிளஸ் தாக்குதல் ஜூன் மாதம் 20-ந் தேதி 51 சதவீதமாக உயர்ந்தது. அதன் பிறகு படிப்படியாக இதன் தாக்கம் குறைந்து வருகிறது.

    கோப்புபடம்

    எனவே டெல்டா வகை வைரஸ்களால் இனி பிரச்சினை எதுவும் இருக்காது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதையும் படியுங்கள்...அலோபதி குறித்த விமர்சனம் - பாபா ராம்தேவ் வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

    Next Story
    ×