search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபா ராம்தேவ்
    X
    பாபா ராம்தேவ்

    அலோபதி குறித்த விமர்சனம் - பாபா ராம்தேவ் வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

    அலோபதி மருந்துகள் மற்றும் அலோபதி மருத்துவமுறை குறித்த பாபா ராம்தேவ் குற்றச்சாட்டு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
    புதுடெல்லி:

    கொரோனா சிகிச்சையில் அலோபதி மருத்துவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாபா ராம்தேவுக்கு எதிராக இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் பாட்னா, ராய்ப்பூர் ஆகிய மாநகரங்களில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பேரிடர் மேலாண்மை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    இந்த வழக்குகளுக்கு தடை கோரி பாபா ராம்தேவ் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மூத்த வக்கீல் பி.எஸ். பட்வாலியா ஆஜராகி, பாபா ராம்தேவ் தெரிவித்த கருத்துகளின் சுருக்கத்தைத் தாக்கல் செய்துள்ளோம் என தெரிவித்தார்.

    அதற்கு பாபா ராம்தேவ் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆட்சேபம் தெரிவித்தார். அப்போது நீதிபதிகள், வாய்ச்சண்டை வேண்டாம். இந்த வழக்கை நாங்கள் இப்போது விசாரிக்கப் போவதில்லை. அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் என தெரிவித்தனர்.
    Next Story
    ×