search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    கர்நாடகத்தில் புதிதாக 3,222 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை தகவல்

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 93 பேர் உயிரிழந்தனர். இதனால் வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 26 ஆயிரத்து 670 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 3,222 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 40 ஆயிரத்து 428 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 93 பேர் உயிரிழந்தனர். இதனால் வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது.

    ஒரே நாளில் 14,724 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் மாநிலத்தில் குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 19 ஆயிரத்து 479 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 997 ஆக குறைந்துள்ளது. பெங்களூரு நகரில் அதிகபட்சமாக 753 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மைசூருவில் 415 பேர், தட்சிண கன்னடவில் 385 பேர், ஹாசனில் 242 பேர், குடகில் 130 பேர், சிவமொக்காவில் 225 பேர், கோலாரில் 105 பேர், பெலகாவியில் 114 பேர், சிக்கமகளூருவில் 114 பேர், குடகில் 130 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 20 மாவட்டங்களில் வைரஸ் தொற்று பாதிப்பு 100-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.

    கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் பெங்களூரு நகரில் 16 பேரும், தட்சிண கன்னடவில் 15 பேரும், மைசூருவில் 10 பேரும், பல்லாரியில் 8 பேரும் என மொத்தம் 93 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 9 மாவட்டங்களில் புதிதாக யாரும் இறக்கவில்லை.

    Next Story
    ×