search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1.89 கோடி - மத்திய அரசு தகவல்

    கடந்த 3 நாட்களில் 2 கோடி தடுப்பூசி டோஸ்கள் நாடு முழுவதும் போடப்பட்டு உள்ளன. இதில் முதல் நாளான 21-ந்தேதி மட்டுமே 88 லட்சத்துக்கு மேற்பட்ட டோஸ்கள் போடப்பட்டன.
    புதுடெல்லி:

    கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. இதில் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த 21-ந்தேதி அமல்படுத்திய மத்திய அரசு, இந்த பணிகளை மேலும் முடுக்கி விட்டுள்ளது.

    இதனால் கடந்த 3 நாட்களில் 2 கோடி தடுப்பூசி டோஸ்கள் நாடு முழுவதும் போடப்பட்டு உள்ளன. இதில் முதல் நாளான 21-ந்தேதி மட்டுமே 88 லட்சத்துக்கு மேற்பட்ட டோஸ்கள் போடப்பட்டன.

    இந்த பணிகளை தொடர்ந்து அதிகரிக்கும் நோக்கில் உற்பத்தியாளர்களிடம் இருந்து தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

    அந்தவகையில் இதுவரை 30 கோடியே 33 லட்சத்து 27 ஆயிரத்து 440 டோஸ்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி இருப்பதாகவும், இதில் நேற்று காலை 8 மணி வரை 28.43 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் (வீணானாவை உள்பட) பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

    மீதமுள்ள 1.89 கோடிக்கு மேற்பட்ட டோஸ்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் இன்னும் கையிருப்பில் இருப்பதாக கூறியுள்ள மத்திய அரசு, மேலும் 21.05 லட்சம் டோஸ்கள் அடுத்த ஓரிரு நாட்களில் வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.
    Next Story
    ×