search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடியுடன் மில்கா சிங்
    X
    பிரதமர் மோடியுடன் மில்கா சிங்

    முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் மறைவுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா இரங்கல்

    முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஒரு மகத்தான விளையாட்டு வீரரை நாங்கள் இழந்துவிட்டோம் என தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா தொற்றால் மொகாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருந்ததால் குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்த மாத தொடக்கத்தில் மில்கா சிங்குக்கு திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்ததால் சண்டிகரில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மில்கா சிங் நேற்று இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மில்கா சிங் மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தேசத்தின் கற்பனையை கைப்பற்றிய மற்றும் இந்தியர்களின் இதயங்களில் சிறப்பு இடத்தைப் பெற்ற ஒரு மகத்தான விளையாட்டு வீரரை நாங்கள் இழந்துவிட்டோம். விளையாட்டில் அவரது எழுச்சியூட்டும் ஆளுமை மில்லியன் கணக்கானவர்களுக்கு தன்னையும் நேசிக்க வைத்தது என தெரிவித்துள்ளார்.

    உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் மில்கா சிங்

    இதேபோல், உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அவர் உலக தடகளத்தில் ஒரு அழியாத அடையாளத்தை வைத்திருக்கிறார். அவரை இந்திய விளையாட்டுகளின் பிரகாசமான நட்சத்திரங்களில் ஒருவராக தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும். அவரது குடும்பத்தினருக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×