search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவிகள் (கோப்பு படம்)
    X
    மாணவிகள் (கோப்பு படம்)

    12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எப்படி? -சிபிஎஸ்இ அறிக்கை தாக்கல்

    10ம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு பாடங்களில் தலா 30 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் திட்டம் தொடர்பான அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சிபிஎஸ்இ தாக்கல் செய்துள்ள அந்த அறிக்கையில், 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை கணக்கில் கொண்டு மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதிப்பெண் வழங்கும் திட்டம் குறித்து தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

    10ம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு பாடங்களில் தலா 30 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். 12-ஆம் வகுப்பு பாடங்களில் 40 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். இந்த நடைமுறைகள் முடிந்ததும், 
    தேர்வு முடிவுகள்
     ஜூலை 31ம் தேதி வெளியிடப்படும்.

    உச்ச நீதிமன்றம்

    இந்த நடைமுறையின் மூலம் கிடைத்த மதிப்பெண்களில் திருப்தி அடையாத மாணவர்கள், கொரோனா பாதிப்பு குறைந்து இயல்புநிலை திரும்பிய பிறகு நேரடியாக தேர்வு எழுதி மதிப்பெண் பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×