search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தடுப்பூசி போட்டுக்கிட்டா காந்த சக்தி கிடைக்கும் - வைரலாகும் தகவல்களை நம்பாதீங்க

    கொரோனாவைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டால் அந்த மாதிரியான சக்தி எதுவும் கிடைக்காது என தெரியவந்துள்ளது.

    தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் போது பக்க விளைவுகள் ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். இதுபோன்ற பக்க விளைவுகளை ஏற்றுக் கொள்ள நாம் பழகி கொண்டிருக்கிறோம். இந்த நிலையில், கொரோனாவைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் காந்த சக்தி கிடைக்கும் என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஜார்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனாவைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பின் தனக்கு காந்த சக்தி கிடைத்ததாக கூறுகிறார். நாஷிக் என்ற மற்றொரு நபர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதும் தனது உடலில் இரும்பு பொருட்கள் ஒட்டிக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

     கோப்புப்படம்

    வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், இதுபோன்று வெளியான தகவல்களை மத்திய அரசு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவல்களில் துளியும் உண்மையில்லை என பி.ஐ.பி. அறிவித்து இருக்கிறது. தடுப்பூசியில் இரும்பு சார்ந்த மூலப்பொருட்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. 

    அந்த வகையில், தடுப்பூசி செலுத்திக் கொண்டால் உடலில் காந்த சக்தி கிடைக்கும் என கூறி வைரலாகும் தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×