search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பூசி போடும் பணி
    X
    தடுப்பூசி போடும் பணி

    டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 0.22 சதவீதமாக குறைந்தது -இன்று 131 பேருக்கு தொற்று

    டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3,226 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது மருத்துவமனைகள் முழுவதும் நிரம்பி படுக்கைகள் கிடைக்காத நிலை இருந்தது. ஏப்ரல் மாதத்தில் இருந்து ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து, பாதிப்பு படிப்படியாக குறைந்தது. இதனால் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 

    இந்நிலையில், டெல்லியில் கொரோனா பாதிப்பு குறித்த தகவலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 131  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பிப்ரவரி 22ம் தேதிக்குப் பிறகு மிக குறைந்த பாதிப்பாகும். மொத்த பாதிப்பு 1431270 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 0.22 சதவீதமாக குறைந்து உள்ளது. 


    கடந்த 24 மணி நேரத்தில் 16 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 24,839 ஆக உயர்ந்துள்ளது. 

    கடந்த 24 மணி நேரத்தில் 355 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 3,226 பேர் சிகிச்சையில் உள்ளனர். 
    Next Story
    ×