search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு
    X
    மத்திய அரசு

    மாநிலங்களிடம் 1.63 கோடி தடுப்பூசி கையிருப்பு - மத்திய அரசு தகவல்

    இந்தியாவில் ஜனவரி 16-ந் தேதி முதல் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தி, கொரோனா தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
    புதுடெல்லி:

    கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வீழ்ச்சிப்பாதையில் ஒரு பக்கம் சென்று கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடைபெறத்தொடங்கி உள்ளன. இந்தியாவில் ஜனவரி 16-ந் தேதி முதல் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தி, கொரோனா தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

    இந்த திட்டத்தின்கீழ் மத்திய அரசானது, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் முன்னுரிமை பயனாளிகளுக்கு இலவசமாகவும், 18-44 வயதினருக்கு மாநில கொள்முதல் திட்டத்தின்கீழ் விலைக்கும் தடுப்பூசிகளை வினியோகித்து வருகிறது. இதுவரையில் 24 கோடியே 60 லட்சத்து 80 ஆயிரத்து 900 ‘டோஸ்’ தடுப்பூசிகள், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

    கோப்புப்படம்


    இவற்றில் 22 கோடியே 96 லட்சத்து 95 ஆயிரத்து 199 ‘டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு விட்டன. இந்த நிலையில், மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் 1 கோடியே 63 லட்சத்து 85 ஆயிரத்து 701 ‘டோஸ்’ தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. நேற்று காலை 7 மணி நிலவரப்படி நாட்டில் 23 கோடியே 13 லட்சத்து 22 ஆயிரத்து 417 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

    இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது

    Next Story
    ×