search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்புட்னிக்-வி தடுப்பூசி
    X
    ஸ்புட்னிக்-வி தடுப்பூசி

    ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தி செய்ய சீரம் இந்தியா அமைப்புக்கு டி.சி.ஜி.ஐ. ஒப்புதல்

    இந்தியாவில் உள்ள இரு தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்பொழுது, ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியானது 91.6 சதவீதம் அதிக திறன் வாய்ந்தது.
    புதுடெல்லி:

    மராட்டியத்தின் புனே நகரில் பூனாவல்லா தலைமையிலான சீரம் இந்தியா அமைப்பு செயல்பட்டு வருகிறது.  இந்நிறுவனத்தில் கோவிஷீல்டு  கொரோனா தடுப்பூசி   உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    நாட்டில் கொரோனா பாதிப்புகளை தடுக்க இந்தியாவில் அவசரகால தேவைக்காக தடுப்பூசிகளை பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கேற்ப, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    அவை பொதுமக்களுக்கும் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.  இந்நிலையில், தடுப்பூசி பற்றாக்குறையை போக்க ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி செய்ய சீரம் இந்தியா அமைப்பு ஆனது, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் (டி.சி.ஜி.ஐ.) அனுமதி கோரியது.

    தடுப்பூசி


    இதற்கு டி.சி.ஜி.ஐ. இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.  இதன்படி, ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பரிசோதனை மற்றும் பகுப்பாய்வு செய்யும் பணியானது, உரிமம் பெற்ற ஹடாப்சர் நகரில் வைத்து மேற்கொள்ளப்படும்.  அதன்பின் உற்பத்தி செய்யப்படும்.

    இதுபற்றி சீரம் இந்தியா அமைப்பின் செய்தி தொடர்பு அதிகாரி கூறும்பொழுது, ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிக்கான முதற்கட்ட ஒப்புதலை நாங்கள் பெற்றிருக்கிறோம்.  எனினும், தடுப்பூசி தயாரிப்புக்கு இன்னும் பல மாதங்கள் ஆகும் என தெரிவித்து உள்ளார்.

    இந்தியாவில் உள்ள இரு தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்பொழுது, ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியானது 91.6 சதவீதம் அதிக திறன் வாய்ந்தது.
    Next Story
    ×