search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீனா
    X
    சீனா

    ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை நடத்த சீனா முன்வந்தது

    ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
    பீஜிங்:

    ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே கடந்த சில மாதங்களாக அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    கத்தார் நாட்டின் மத்தியஸ்தத்தின் கீழ் அந்த நாட்டின் தலைநகர் தோகாவில் நடந்து வரும் இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் இதுவரை எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலீபான் பயங்கரவாத அமைப்பு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு சீனா முன்வந்துள்ளது.

    சீன வெளியுறவு மந்திரி வாங் யி, ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மோஹிப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது சீன அரசின் நிலைப்பாட்டை தெரிவித்தார்.

    இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘சீனாவில் அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான நிலைமைகளை உருவாக்குவது உள்பட ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை எளிதாக சீன தரப்பு தயாராக உள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை வெளியேற்றுவதற்கான அமெரிக்காவின் முடிவு ஆப்கானிஸ்தானின் நிலைமையில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளதாக வாங் யி குறிப்பிட்டார்.
    Next Story
    ×