search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்
    X
    ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்

    சுதந்திர போராட்டத்துக்கு பிறகு இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய சவால் கொரோனா - ரகுராம் ராஜன்

    சுதந்திர போராட்டத்துக்கு பிறகு இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய சவால் கொரோனா வைரஸ் பெருந்தொற்றாகத்தான் இருக்கிறது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜன் தற்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். டெல்லியில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின் கல்வி மையம் சார்பில் நடந்த காணொலி சந்திப்பில் ரகுராம் ராஜன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    கொரோனா வைரஸ் பெருந்தொற்று இந்தியாவுக்கு கொடுத்துள்ள மிகவும் வேதனையான நேரமிது. சுதந்திரத்துக்கு பிறகு இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய சவால் கொரோனா வைரஸ் பெருந்தொற்றாகத்தான் இருக்கிறது என நினைக்கிறேன்.

    கொரோனா வைரஸ்

    கொரோனா முதல் அலை இந்தியாவில் தாக்கும்போது, போடப்பட்ட ஊரடங்கால் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சவாலான சூழல் எழுந்தது. ஆனால், இப்போது பொருளாதார ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியிலும் சவால்கள் எழுந்து உள்ளன. நாம் முன்னேறும்போது, சமூக ரீதியான பங்கும் இனி இருக்கும்.

    கொரோனா வைரசின் மிகப்பெரிய பாதிப்புகளில் ஒன்று, பல்வேறு இடங்களில், பல்வேறு காரணங்களுக்காக மக்களுக்கு உதவ அரசு இல்லாமல் இருந்ததை பார்க்க நேர்ந்தது. பல இடங்களில் அரசால் மக்களுக்கு உதவ முடியவில்லை, அரசு எந்திரம் வேலை செய்யவில்லை. பெருந்தொற்று காலம் நாம் அனைவரையும் ஒன்று சேர்த்துள்ளது. சீர்திருத்தம் என்பது மறைமுகமாக இருக்காமல், வெளிப்படையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
    Next Story
    ×