search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பைசர்
    X
    பைசர்

    வூகான் ஆய்வகத்தின் உரிமையாளர் என கூறி வைரலாகும் பகீர் தகவல்

    சீனாவின் வூகான் ஆய்வகத்தை வைத்திருக்கும் நிறுவனத்தில் பில் கேட்ஸ் பங்குதாரராக இருக்கிறார் என கூறப்படுகிறது.


    கொரோனாவைரஸ் முதலில் தோன்றிய சீன ஆய்வகத்தின் உரிமையாளர் என கூறும் தகவல் பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. மேலும் இதே நிறுவனம் தான் தற்போது கொரோனாவுக்கான தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்கிறது என கூறப்படுகிறது.

    சீனாவில் உள்ள வூகான் ஆய்வகம் கிளாக்சோஸ்மித்லைன் (GlaxoSmithKline-GSK) எனும் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. இதே நிறுவனம் தான் பைசர் எனும் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்கிறது என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    மேலும் இந்த நிறுவனத்தில் கோடீஸ்வரர்களான ஜார்க் சோரோஸ் மற்றும் பில் கேட்ஸ் உள்ளிட்டோர் பங்குதாரர்களாக இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், ப்ரிட்டனை சேர்ந்த மருந்து உற்பத்தி செய்யும் GSK நிறுவனம் பைசர் மற்றும் வூகான் ஆய்வு மையங்களின் உரிமையாளர் இல்லை என தெரியவந்துள்ளது. வூகான் ஆய்வகத்தை சீன அரசாங்கம் நிர்வகிக்கிறது. GSK மறஅறும் பைசர் 2018 ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் கூட்டணி அமைத்தன. 

    அந்த வகையில் கொரோனா தொற்று முதன் முதலில் வெளியான ஆய்வகம் மற்றும் அதற்கான தடுப்பு மருந்தை உற்பத்தி செய்வது ஒரே நிறுவனம் இல்லை என உறுதியாகிவிட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×