search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் மந்திரி பினராயி விஜயன்
    X
    முதல் மந்திரி பினராயி விஜயன்

    கேரளாவில் ஊரடங்கு தேவையில்லை - அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

    கேரள மாநிலத்தில் கொரோனா 2-வது அலை கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 38 ஆயிரத்து 657 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 5 ஆயிரத்து 574 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 603 பேருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கேரளாவில் 2,19,221 பேருக்கு கொரோனா பாதிப்புகளுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.  8,122 பேர் குணமடைந்து உள்ளனர்.  இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 11,81,324 ஆக உயர்வடைந்து உள்ளது.  5,110 பேர் உயிரிழந்து உள்ளனர்.

    இந்நிலையில், தொடர்ந்து உயர்ந்து வரும் பாதிப்புகளை முன்னிட்டு கேரளாவில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. அதில், கேரளாவில் ஊரடங்கு தேவையில்லை. ஆனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதேபோல், மே 2-ம் தேதி மாநிலத்தில் சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் வெற்றி கொண்டாட்ட ஊர்வலங்களை நடத்தக்கூடாது எனவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    கேரளாவில் இலவச தடுப்பூசி போடப்பட வேண்டும் என கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
    Next Story
    ×