search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பினராயி விஜயன்
    X
    பினராயி விஜயன்

    கேரளாவில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை - பினராயி விஜயன்

    கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    தற்போதைய உள்ள சூழ்நிலையில் அரசு எந்த வித ஊரடங்கையும் செயல்படுத்தப்போவதில்லை. அதற்கு பதிலாக, மக்கள் கோவிட் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி இலவசமாக போடப்படும்.

    கோப்புபடம்

    தடுப்பூசிகளை வாங்குமாறு மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் கோவிட் -19 காரணமாக மாநிலங்கள் ஏற்கனவே நிதிச் சுமையைச் சந்தித்து வருகின்றன. மாநிலங்களை மேலும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளுவதற்கு பதிலாக, மத்திய அரசு மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும்.

    கோவிட்-19 நிலைமை குறித்து விவாதிக்க அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×