search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிபிஎஸ்இ
    X
    சிபிஎஸ்இ

    சிபிஎஸ்இ தேர்வை ரத்து செய்ய 5 லட்சம் பேர் டுவிட்டரில் பதிவு

    சிபிஎஸ்இ தேர்வை ரத்து செய்யக் கோரி சமூக வலை தளமான டுவிட்டரில் பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. நாடு முழுவதும் தினசரி பாதிப்பு தற்போது 1.5 லட்சத்தை தாண்டி உள்ளது.

    இதைதொடர்ந்து மாணவ- மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ. தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா, ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் சி.பி.எஸ்.இ. தேர்வை நடத்தும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.


     

    கொரோனா வைரஸ்

    இதற்கிடையே சி.பி.எஸ்.இ. தேர்வை ரத்து செய்யக் கோரி சமூக வலை தளமான டுவிட்டரில் பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    மாணவ- மாணவிகளும் இந்த தேர்வை ரத்து செய்யக் கோரி டுவிட்டரில் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். இதுவரை 5 லட்சம் பேர் சி.பி.எஸ்.இ. தேர்வை ரத்து செய்யக் கோரி டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர்.

    1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்ட மனுவும் மத்திய தேர்வு வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    Next Story
    ×