search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தடுப்பூசி போட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்? புதிய வழிகாட்டுதலை மத்திய அரசு வெளியிடுகிறது

    இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    ஆனால் ஊசி போட்டுக் கொண்ட பிறகு ஒரு சிலருக்கு சில பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக கடுமையான உடல்சோர்வு, காய்ச்சல், ஒவ்வாமை, மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, காலில் வீக்கம், அடிவயிற்றில் வலி, நரம்பு தளர்ச்சி, கடுமையான தலைவலி, ஊசி போட்ட இடத்தில் ரத்த உறைவு போன்றவை ஏற்படுகின்றன. இதில் சுமார் 700 பேர் வரை கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    இதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற மருத்துவ வழிகாட்டுதல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

    எனவே ஊசி போட்டுக்கொண்ட பிறகு என்ன செய்ய வேண்டும் என்று புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வழங்க உள்ளது.

    கோப்புபடம்

    இதற்காக ஆய்வு செய்வதற்கு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். அதன் பிறகு புதிய வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

    Next Story
    ×