search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நாடுமுழுவதும் இன்று முதல் 4 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா - அதிகம் பேருக்கு ஊசிபோட திட்டம்

    பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து ஊசி போட்டுக்கொள்ள வசதியாக பிரதமர் மோடி இன்று முதல் 4 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழாவை நடத்த உத்தரவிட்டார்.

    புதுடெல்லி:

    நாடுமுழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 1 லட்சத்து 52 ஆயிரம் பேரை புதிதாக கொரோனா தொற்றியுள்ளது.

    எனவே நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாநில அரசுகளுக்கு அவ்வப்போது புதிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

    தற்போதைய நிலையில் கொரோனா விதிமுறைகளை சரியாக பின்பற்றினால் மட்டுமே நோய் கட்டுக்குள் வரும் என்ற நிலை உள்ளது. அத்துடன் தடுப்பூசி போடுவதை அதிகரித்ததாலும் இதன் பரவல் குறைய ஆரம்பித்துள்ளது.

    எனவே தடுப்பூசி திட்டத்தையும் வேகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் முக்கிய தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு பொதுமக்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்ளவில்லை. ஜனவரி மாதம் 16-ந்தேதி தடுப்பூசி போடுவது தொடங்கப்பட்டது.

    இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. ஆரம்ப கட்டத்தில் தடுப்பூசி போட்டு கொள்வதற்கு மக்கள் தயக்கம் காட்டினார்கள். ஆனால் இப்போது நோய் பரவல் அதிகரித்திருப்பதை அடுத்து அச்சம் அடைந்துள்ள பொதுமக்கள் பலரும் தாமாக முன்வந்து ஊசி போட்டுக்கொள்கிறார்கள்.

    இதன்காரணமாக தற்போது ஊசி போட்டுக் கொண்டவர்களுடைய எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது. ஆனாலும் இது போதாது, இன்னும் அதிகம் பேர் ஊசி போட்டுக்கொண்டால் தான் பரவல் கட்டுக்குள் வரும் என்று கருதப்படுகிறது.

    கோப்புபடம்

    எனவே பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து ஊசி போட்டுக்கொள்ள வசதியாக பிரதமர் மோடி இன்று முதல் 4 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழாவை நடத்த உத்தரவிட்டார்.

    இதற்காக ஏற்னவே ஊசி போடப்பட்டு வந்த அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், சமூக கூடங்கள் ஆகியவற்றில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. 4 நாட்களும் இவை செயல்படும். பொதுமக்கள் அதிகம் பேர் வந்து ஊசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்கக பிரசாரங்களும் செய்யப்படுகின்றன.

    பல இடங்களில் சுகாதார ஊழியர்கள் நேரடியாக வீடுகளுக்கு சென்று அழைப்பு விடுத்தனர். இதனால் இந்த மையங்களில் அதிகம் பேர் ஊசி போட்டுக்கொண்டனர்.

    தடுப்பூசி திருவிழாவில் பல லட்சம் பேர் ஊசி போட்டுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் ஒட்டுமொத்த மாக வந்து ஊசி போடுவதால் மருந்து வீணாவதும் தடுக்கப்படும். தடுப்பூசி திருவிழா நடைபெறும் அதேநேரத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக பல மாநிலங்கள் குற்றம்சாட்டி உள்ளன.

    பஞ்சாப், ராஜஸ்தான், மராட்டிய மாநிலம் ஆகியவற்றில் கொரோனா தடுப்பூசி வேகமாக தீர்ந்து வருவதாக கூறியிருக்கிறார்கள். பஞ்சாப் முதல்-மந்திரி அமீர்ந்தர் சிங், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் அடுத்த 2 நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசி இருப்பு இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

    டெல்லியில் 10 நாட்களுக்கு மட்டுமே இருப்பு இருப்பதாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசி இருப்பு இருக்கிறது. எனவே 10 லட்சம் தடுப்பூசிகளை அவசரமாக அனுப்ப வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

    Next Story
    ×