search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் மந்திரி எடியூரப்பா
    X
    முதல் மந்திரி எடியூரப்பா

    கர்நாடகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் திட்டம் அரசிடம் இல்லை - எடியூரப்பா

    இன்னும் ஒரு வாரத்திற்கு பின்பே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு:

    பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கர்நாடகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது.
    இதுதொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

    மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் திட்டம் அரசிடம் இல்லை. இன்னும் ஒரு வாரம் கொரோனா பரவல் எப்படி உள்ளது என்பது குறித்து பொருத்திருந்து பார்க்கப்படும். மக்கள் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றினால், கொரோனா பரவல் குறையும். இன்னும் ஒரு வாரத்திற்கு பின்பே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

    இதற்கிடையில், ராய்ச்சூர் மாவட்டத்தில் நேற்று இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்-மந்திரி எடியூரப்பாவிடம், ரமேஷ் ஜார்கிகோளி பிரசாரம் செய்வாரா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ரமேஷ் ஜார்கிகோளி பிரசாரம் செய்வார். பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்றார்.
    Next Story
    ×