search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் ஆணையம்
    X
    தேர்தல் ஆணையம்

    கேரளாவில் காலியாகும் 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

    தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளின்போதும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.
    புதுடெல்லி:

    கேரள மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட  எம்பிக்களான அப்துல் வகாப், கே.கே.ராகேஷ், வயலார் ரவி ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 21ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் காலியாகும் இந்த மூன்று உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்து, தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-

    கேரளாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் அப்துல் வகாப், கே.கே.ராகேஷ், வயலார் ரவி ஆகியோரின் பதவிகாலம் நிறைவடைய உள்ளதால், காலியாக உள்ள அந்த பதவிகளுக்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. 

    இதற்கான அறிவிப்பாணை மார்ச் 24ம் தேதி வெளியிடப்படும். அன்றே வேட்பு மனு தாக்கல் தொடங்கும். வேட்பு மனு தாக்கல் செய்ய மார்ச் 31ம் தேதி கடைசி நாள் ஆகும். ஏப்ரல் 3ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஏப்ரல் 5ம் தேதி ஆகும். போட்டி இருந்தால் ஏப்ரல் 12ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு அன்று மாலையே முடிவு அறிவிக்கப்படும். 

    தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளின்போதும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். தேர்தல் பார்வையாளராக மாநில தலைமை தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×