search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மிக் 21 ரக விமானம்
    X
    மிக் 21 ரக விமானம்

    விபத்தில் சிக்கிய இந்திய விமானப்படை விமானம்... குரூப் கேப்டன் பலி

    இந்திய விமானப்படையின் மிக் ரக போர் விமானம் பயிற்சியின்போது விபத்தில் சிக்கியது.
    புதுடெல்லி:

    இந்திய விமானப்படையின் மிக்21 பைசன் போர் விமானம் இன்று விபத்தில் சிக்கியது. மத்திய இந்திய விமானப்படை தளத்தில் இருந்து மிக்.21 பைசன் விமானம் வழக்கமான பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக விமானம் விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தை ஓட்டிச்சென்ற குரூப் கேப்டன் ஏ.குப்தா உயிரிழந்தார்.

    போர் விமானம் விபத்துக்குள்ளாகி, குரூப் கேப்டன் உயிரிழந்த செய்தியை விமானப்படை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து, அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. அத்துடன், விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் கூறி உள்ளது.
    Next Story
    ×