search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்மலா சீதாராமன்
    X
    நிர்மலா சீதாராமன்

    நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்க தனியார் துறைகளை வரவேற்கிறோம் - பட்ஜெட் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்

    நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்க தனியார் துறைகளை வரவேற்பதையும், அவற்றின் மீது நம்பிக்கை வைத்திருப்பதையும் மத்திய பட்ஜெட் தெளிவுபடுத்தி இருப்பதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
    ஆமதாபாத்:

    பா.ஜனதா சார்பில் கல்வியாளர்கள் கூட்டம் ஒன்று ஆமதாபாத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட் குறித்து விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இது ஒரு புதிய தசாப்தத்துக்கான பட்ஜெட். தனியார் துறைகள் மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருப்பதை, நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்க அவர்களை வரவேற்பதை பட்ஜெட் மிகவும் தெளிவாக விளக்குகிறது. ஒரு அரசால் என்ன முடியும்? எவ்வளவு நாளைக்கு அதை செய்ய முடியும் என்பதை நாங்கள் எடுத்துரைத்திருக்கிறோம். எனவே இந்த பட்ஜெட், இந்திய பொருளாதாரத்துக்கு நேரடி மாற்றத்தை கொடுக்கிறது.

    சோசலிஷத்தை புகழும் சோவியத் யூனியனில் இருந்து ஒரு அமைப்பை நாங்கள் பெற்றிருக்கிறோம். அதாவது நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் மேம்பாட்டை சோசலிசத்தால் மட்டுமே கையில் கவனிக்க முடியும். வளர்ந்த நாடுகள் எல்லாம் ஒரு சோசலிச தனிச்சிறப்பு வாய்ந்தவை என அவர்கள் கூறுகிறார்கள்.

    எனவே இந்திய பண்பாட்டு நெறிமுறைகளுக்கு பொருந்தாத சோசலிசத்துக்காக சென்றோம். லைசென்ஸ்-இடஒதுக்கீடு ஆட்சியின் மோசமான காலத்தில் நாம் வாழ்ந்திருக்கிறோம்.

    பட்ஜெட் வழங்கும் நேரடி மாற்றத்தை குறித்து நாம் பேசும்போது, இதைத்தான் (தொழில்துறைக்கான சோசலிசம் மற்றும் லைசென்ஸ்-இடஒதுக்கீடு ஆட்சி) சொல்கிறோம். தற்போது, நாங்கள் உங்களை சந்தேகப்படமாட்டோம் (குடிமக்கள் மற்றும் செல்வம் உருவாக்குவோர்), அதாவது நீங்கள் எப்போதும் சிலவற்றுக்கு மேலேதான் இருக்கிறீர்கள். நாங்கள் உங்களை நம்புவதுடன், நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்க வரவேற்கிறோம். நீங்களே பணத்தை முதலீடு செய்து, கடினமாக உழைத்து பொருட்களை உற்பத்தி செய்யும்போது, அதில் 3-வது நபர் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க வேண்டிய அவசியம் என்ன? அதைப்போலத்தான் நாங்கள் வரி அமைப்பையும் மாற்றி விட்டோம். அது நேரடி வரிகளோ அல்லது மறைமுக வரிகளோ எதுவானாலும் சரி.

    ஒருவருடன் நேரடியாக பேசி தவறுகளை காண்பதை விட, அமைப்புகளில் எங்கெல்லாம் ஓட்டைகள் இருக்கின்றன என்பதை வெற்றிகரமாக அடையாளம் காண்பதில் தொழில்நுட்பங்கள் சிறந்து விளங்குகின்றன. அந்தவகையில் தொழில்நுட்ப பயங்கரவாதம்தான் அடுத்து வரப்போகிறது. வரி பயங்கரவாதம் எல்லாம் பழங்கதை ஆகிவிட்டது.

    இந்தியாவில் இந்த ஆண்டு 11.5 சதவீத பொருளாதார வளர்ச்சி இருக்கும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது. ஜி.எஸ்.டி. வசூல் தொடர்ந்து வசூலித்து வருவதே, நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதை எடுத்துச்சொல்லும்.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
    Next Story
    ×