search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித்ஷா
    X
    அமித்ஷா

    வருகிற 4-ந்தேதி அமித் ஷா திருப்பதி வருகை

    தென் மாநிலங்களில் வருகிற 29-ந்தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மார்ச் 4-ந்தேதி திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்க உள்ளார்.
    திருப்பதி:

    திருப்பதி எம்.பி. பா.ஜ.க.வை சேர்ந்த துர்கா பிரசாத் ராவ் கொரோனா பாதிப்பால் கடந்த செப்டம்பர் மாதம் உயிரிழந்தார்.

    இதையடுத்து திருப்பதி பாராளுமன்ற தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் தேர்ந்தெடுக்கும் பணியில் பா.ஜ.க. உள்ளிட்ட முக்கிய கட்சிகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்த நிலையில் தென் மாநிலங்களில் வருகிற 29-ந்தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மார்ச் 4-ந்தேதி திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்க உள்ளார்.

    அன்று அவர் திருப்பதியில் பா.ஜ.க. நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு திருப்பதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளரை அறிவிக்க உள்ளார்.

    ஜனசேனை கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாணும் திருப்பதி இடைத்தேர்தலில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறார். அவர் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது. அவர் திருப்பதியில் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×