search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    24 மணி நேரத்தில் 13,193 பேருக்கு தொற்று, 97 பேர் உயிரிழப்பு... இந்தியா கொரோனா அப்டேட்ஸ்

    நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,39,542 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,09,63,394 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13,193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 97 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,56,111 ஆக உயர்ந்துள்ளது. 

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,06,67,741 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 10,896 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 97.30 சதவீதமாக உள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.42 சதவீதமாக உள்ளது.

    நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,39,542 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 1,01,88,007 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று 6,58,674 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    Next Story
    ×