search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மேகாலயாவில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.5 குறைப்பு

    மேகாலயாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்பட்டுள்ளது.
    சில்லாங்:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது.

    இதனால் முன் எப்போதும் இல்லாத அளவில் பெட்ரோல், டீசல் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

    பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் மேகாலயா மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அதன்படி நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்தது.

    மேலும் அவர்கள் மாநில அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்காவிட்டால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் எச்சரித்தனர்.

    இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மாநில முதல்- மந்திரி கான்ராட் கே சங்மா, மந்திரிகள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

    இதில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைக்க அரசு முடிவு செய்தது.

    இதன் விளைவாக அந்த மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×