search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    மம்தா பானர்ஜி திட்டம் என கூறி வைரலாகும் புகைப்படம்

    மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசின் திட்டம் என கூறி வைரலாகும் புகைப்படம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    மேற்கு வங்கத்தில் அமர் பாரி திட்டத்தின் ஒருபகுதி என கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் கட்டிடம் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இடம்பெற்று இருக்கிறார். 

    இந்த புகைப்படம், சேரியில் வசித்து வந்தவர்களுக்கு திதியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் புது அடுக்குமாடி குடியிருப்புக்கு குடியேறுவதற்கான சாவி ஒப்படைக்கப்பட்டது எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

     வைரல் புகைப்படம்

    வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், வங்க தேசத்தை சேர்ந்த செய்தி வலைதளம் ஒன்று இதே புகைப்படத்தை கொண்டு கடந்த ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி செய்தி வெளியிட்டு இருக்கிறது. உண்மையில் அந்த புகைப்படம் வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஆகும். இது வங்காளதேச அரசாங்கத்தின் ஷேக் ஹசினா ஆஷ்ரயோன் பிரகல்பா எனும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டவை ஆகும். 

    அந்த வகையில் வைரல் புகைப்படம் மேற்கு வங்க அரசு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. 

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×