search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவேந்திர பட்னாவிஸ்
    X
    தேவேந்திர பட்னாவிஸ்

    புனே மாநகராட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும்: தேவேந்திர பட்னாவிஸ்

    புனே மாநகராட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும். எங்கள் பலத்தின் அடிப்படையில் போராடி வெற்றியை நிரூபிப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
    புனே :

    புனே மாநகராட்சிக்கு நடப்பு ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இதனை முன்னிட்டு நேற்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் புனேவிற்கு வருகை தந்தார்.

    அங்கு மாநகராட்சி கமிஷனரை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புனே மாநகராட்சியில் கிடப்பில் இருக்கும் பணிகள் குறித்து விவாதித்தேன். நான் முதல்-மந்திரியாக இருந்த சமயத் தில் நகரத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அனுமதிக்கப்பட் டன. அவற்றில் 24 மணி நேரம் குடிநீர் வழங்கல் திட்டம் ஒன்றாகும். அந்த பணிகள் தற்போது கிடப்பில் உள்ளது.

    புனே மெட்ரோ வழித்தடம் 21 கி.மீ. தூரம் வரை நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதற்கான போக்குவரத்து சேவை நடப்பாண்டில் தொடங்கும். இரண்டாம் கட்ட வழித்தடம் அமைக்க அடுத்த ஆண்டு நிதியுதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புனே மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டியிடும். எங்களுக்கு யாரது துணையும் தேவையில்லை. எங்கள் பலத்தின் அடிப்படையில் போராடி வெற்றியை நிரூபிப்போம். நவநிர்மாண் சேனாவுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×