search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்தது

    கொரோனாவுக்கு எதிராக உலக அளவில் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை அமல்படுத்தி உள்ள இந்தியா, இந்த திட்டத்தின்கீழ் வேகமாக செயலாற்றி வருகிறது
    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த மாதம் 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிராக உலக அளவில் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை அமல்படுத்தி உள்ள இந்தியா, இந்த திட்டத்தின்கீழ் வேகமாக செயலாற்றி வருகிறது. இதனால் நாள்தோறும் லட்சக்கணக்கான பயனாளிகள் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இதன் பலனாக 70 லட்சத்துக்கு அதிகமானோர் இதுவரை தடுப்பூசி போட்டுள்ளனர். அதாவது நேற்று காலை 8 மணி நிலவரப்படி 70 லட்சத்து 11 ஆயிரத்து 114 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

    இதில் 57 லட்சத்து 5 ஆயிரத்து 228 பேர் சுகாதார பணியாளர்கள் ஆவர். அதேநேரம் தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள பணியாளர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 11 ஆயிரத்து 886 ஆகும்.

    இந்த சாதனையை இந்தியா வெறும் 26 நாட்களில் எட்டியுள்ளது. அதேநேரம் அமெரிக்காவோ இந்த 70 லட்சத்தை அடைவதற்கு 27 நாட்களையும், இங்கிலாந்து 48 நாட்களையும் எடுத்திருக்கின்றன.

    13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், பதிவு செய்யப்பட்ட சுகாதார பணியாளர்களில் 65 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட்டு முடித்துள்ளன. அதேநேரம் 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 40 சதவீதத்துக்கும் குறைவானோருக்கு தடுப்பூசி பேட்டுள்ளன.

    இதில் மிகவும் குறைவாக புதுச்சேரியில் வெறும் 17.5 சதவீத சுகாதார பணியாளர்களுக்கே தடுப்பூசி போடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
    Next Story
    ×