search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடியுடன்  நிதிஷ் குமார் சந்திப்பு
    X
    பிரதமர் மோடியுடன் நிதிஷ் குமார் சந்திப்பு

    பிரதமர் மோடியுடன் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் சந்திப்பு

    பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
    புதுடெல்லி:

    பீகாரில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 115 இடங்களில் போட்டியிட்டு 44 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சியான பா.ஜ.க. 110 இடங்களில் போட்டியிட்டு 74 இடங்களில் வெற்றி பெற்றது.

    பா.ஜ.க.வுடன் இன்னும் உடன்பாடு எட்டப்படாததால் தற்போது 15 அமைச்சர்களுடன் அரசை நடத்தி வருகிறார். வரும் 19-ம் தேதி  பீகார் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக நிதிஷ் குமார் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. பா.ஜ.க.வின் ஷா நவாஸ் உசேன் உள்ளிட்ட 17 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லி சென்றிருந்த பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் பிரச்சினை குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
    Next Story
    ×