search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் போராட்டம்
    X
    விவசாயிகள் போராட்டம்

    விவசாயிகள் போராட்டத்திற்கு அவர் ஆதரவு தெரிவித்தாரா?

    டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு அவர் ஆதரவு தெரிவித்தார் என கூறி வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    விவசாயிகள் போராட்டத்திற்கு உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பல்வேறு அரசியல் தலைவர்கள், பல்துறை பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக அன்டர்டேக்கர் கருத்து தெரிவித்தார் என கூறும் தகவல் வைரலாகி வருகிறது.

    வைரல் பதிவில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவான ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட் இடம்பெற்று இருக்கிறது. இது அன்டர்டேக்கரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் இருந்து பதிவிடப்பட்டதாக தெரிகிறது. இந்த பதிவுடன் அன்டர்டேக்கருக்கு நன்றி தெரிவிக்கும் பதிவுகளும் இணையத்தில் வலம் வருகின்றன.

    விவசாயிகள் விளைவிக்கும் உணவு பொருட்கள் இன்றி ஆரோக்கியமான உடலை நாம் நினைத்தும் பார்க்க முடியாது. விவசாயிகளை மதித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போம் எனும் தலைப்பில் ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட் இணைத்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்டை ஆய்வு செய்ததில், அது மார்பிங் செய்யப்பட்ட ஒன்று என்பது தெரியவந்தது. உண்மையில் கடந்த ஆண்டு WWE சார்பில் தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டும் பணிகளில் ஈடுபட்ட போது அன்டர்டேக்கர் டிசம்பர் 17, 2020 அன்று தற்சமயம் வைரலாகும் புகைப்படத்தை பதிவிட்டார்.

    மேலும் தற்போதைய விவசாயிகள் போராட்டம் பற்றி அன்டர்டேக்கர் இதுவரை எந்த கருத்தையும் தனது ட்விட்டரில் பதிவிடவில்லை. அந்த வகையில், விவசாயிகள் போராட்டத்திற்கு அன்டர்டேக்கர் ஆதரவு தெரிவித்ததாக கூறி வைரலாகும் தகவலில் உண்மையில்லை என்பது உறுதியாகிவிட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×