search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் போராட்டம்
    X
    விவசாயிகள் போராட்டம்

    புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசுக்கு அக்டோபர் 2ம் தேதி வரை கால அவகாசம்- விவசாயிகள் சங்கம்

    புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசுக்கு அக்டோபர் 2ம் தேதி வரை கால அவகாசம் விதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை உறுதி செய்யவும் கோரி விவசாயிகள் நவம்பர் 26 முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக இன்று நண்பகல் முதல் பிற்பகல் 3 மணி வரை  தேசிய நெடுஞ்சாலைகளில் சக்கா ஜாம் என்ற சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக ஏற்கெனவே அறிவித்தனர். அதன்படி அரியானா மாநிலம் பால்வாலில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

    மேலும் 3 மணிக்கு தொடர்ந்து 1 நிமிடம் வாகனங்களில் ஒலி எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில் டெல்லி எல்லை சாலைகளில் தடுப்புகள், ஆணிகள், முள் வேலிகளை அமைத்துள்ள போலீசார், நிலைமையை டிரோன்களை வைத்து கண்காணித்து வருகின்றனர்.

    டெல்லியில் உள்ள 12 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடியரசு தினத்தன்று வன்முறை நடந்த செங்கோட்டை பகுதியில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி ஐடிஓ பகுதியில் சாலைகளுக்கு நடுவே முள்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. டெல்லியின் முக்கிய எல்லைகளான திக்ரி, ஷிங்கு, காசிபூரில் மத்திய ரிசர்வ் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    சிங்கு, காசிப்பூர் மற்றும் திக்ரி மற்றும் அவற்றின் அருகிலுள்ள பகுதிகளில் இன்று இரவு 11:59 மணி வரை "பொது பாதுகாப்பைப் பேணுவதற்கும் பொது அவசரநிலையைத் தவிர்ப்பதற்கும்" இணைய சேவைகள் இடைநிறுத்தப்பட உள்ளன.

    மூன்று மணி நேர நாடு தழுவிய 'சக்கா ஜாம்' முடிவடைந்த நிலையில் பாரதிய கிசான் யூனியன் ராகேஷ் டிக்கைட்  கூறியதாவது:-

    சட்டங்களை ரத்து செய்ய அக்டோபர் 2 ஆம் தேதி வரை அரசுக்கு அவகாசம் அளித்துள்ளோம். அக்டோபர் 2ம் தேதிக்கு பின் அடுத்தகட்ட போராட்டம் குறித்து அனைத்து விவசாயிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும். நாங்கள் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க மாட்டோம், நிர்பந்தத்தின் பேரில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×