search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜகவில் இணைந்த தலைவர்கள்
    X
    பாஜகவில் இணைந்த தலைவர்கள்

    மம்தா பானர்ஜி கட்சியில் இருந்து மேலும் 5 தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்

    மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த எம்எல்ஏ உள்ளிட்ட 5 அதிருப்தி தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்.
    புதுடெல்லி:

    மேற்கு வங்கத்தில் ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் முயற்சித்து வரும் நிலையில், இந்த முறை ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக ‘மி‌ஷன் பெங்கால்’ என்ற பெயரில் தேர்தல் பணிகளை தொடங்கி ஊக்குவித்து வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களையும், முக்கிய பிரமுகர்களையும் பாஜக தங்கள் பக்கம் இழுத்து வருகிறது. முக்கிய தலைவர்கள் பலர் பாஜகவில் இணைந்துள்ளனர். 

    அவ்வகையில், மாநில முன்னாள் அமைச்சர் ராஜீப் பானர்ஜி மற்றும் பைஷாலி டால்மியா, பிரபீர் கோஷல், ரத்தின் சக்கரவர்த்தி மற்றும் ருத்ரனில் கோஷ் ஆகியோர் இன்று டெல்லியில் உள்துறை மந்திரி அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். 

    இவர்களில் ராஜீப் பானர்ஜி கடந்த 22ம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதுடன், எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். 

    ‘வங்காளத்தின் வளர்ச்சிக்கு, மாநில அரசும் மத்திய அரசும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தற்போது, பாஜகவில் சேர வேண்டியது காலத்தின் தேவை. மாநிலத்திற்கும் மாநில மக்களுக்கும் வளர்ச்சியைத் தவிர வேறொன்றையும் நான் விரும்பவில்லை’ என்கிறார் பானர்ஜி.
    Next Story
    ×