
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் 59-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாய
பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறித்து மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
விவசாயிகளின் நலன் பேச்சுவார்த்தை நடத்தும் விவசாய சங்கங்கள் மனநிலையாக இல்லாததால் பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமலேயே உள்ளது. எனக்கு இது வருத்தமாக உள்ளது. மாற்றுவழிகளை அரசு தரப்பு கேட்கும்போதும் வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்றே விவசாய சங்கங்கள் கூறுகின்றன.
விவசாயிகளின் நலனுக்காகவும், நாட்டு நலனுக்காகவும் எங்கள் கோரிக்கையை மறுபரீசிலனை செய்யவேண்டும் என நாங்கள் கூறியுள்ளோம். விவசாயிகள் தங்கள் முடிவை நாளை தெரிவிக்கவேண்டும் என கூறியுள்ளோம்.
விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற வேண்டுமெனவும், நல்லது எதுவும் நடந்துவிடக்கூடாது எனவும் சில சக்திகள் விரும்புகின்றன. முடிந்த அளவுக்கு தீர்வு ஏற்படுவதற்கான வழிமுறைகளை அரசு விவசாய சங்க அமைப்புகளிடம் வழங்கியுள்ளது.
என்றார்.