என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயிகள் டிராக்டர் பேரணிக்கு தயாராகும் போது எடுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ
Byமாலை மலர்19 Jan 2021 5:01 AM GMT (Updated: 19 Jan 2021 5:01 AM GMT)
விவசாயிகள் டிராக்டர் பேரணிக்கு தயாராகும் போது எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகும் வீடியோ பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராடும் விவசாயிகள் ஜனவரி 26 ஆம் தேதி டிராக்டரில் பேரணி நடத்த இருப்பதாக அறிவித்து இருக்கின்றனர். முன்னதாக ஜனவரி 7 ஆம் தேதி சில விவசாயிகள் டெல்லி எக்ஸ்பிரஸ்வே சாலையில் டிராக்டர் பேரணிக்கான ஒத்திகையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அசத்தலான டிராக்டர் பேரணி ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோ விவசாயிகள் நடத்திய ஒத்திகையின் போது எடுக்கப்பட்டது என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது ஐயர்லாந்தில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த வீடியோ கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் எடுக்கப்பட்டது ஆகும். இந்த வீடியோ டிசம்பர் 2020 முதல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அந்த வகையில் வைரலாகும் வீடியோ டிராக்டர் பேரணிக்கான அறிவிப்பை விவசாயிகள் அறிவிக்கும் முன் எடுக்கப்பட்டது என உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Next Story
×