search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்ச நீதிமன்றம்
    X
    உச்ச நீதிமன்றம்

    என்ன நடக்கிறது? வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க நேரிடும்... உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

    வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தால் விவசாயிகளுடன் பேசுவதற்கு, குழு அமைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி திமுக எம்பி திருச்சி சிவா, ஆர்ஜேடி எம்பி மனோஜ் ஜா உள்ளிட்டோர் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. இதேபோல் டெல்லியின் எல்லைகளில் போராடிவரும் விவசாயிகளை அகற்றக் கோரி சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் தாக்கல் செய்த மனுவும் இந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்பட்டது.

    விசாரணையின்போது, விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். 

    விவசாயிகள் போராட்டம்

    ‘சிலர் தற்கொலை செய்துள்ளனர். வயது முதிர்ந்தவர்கள், பெண்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அங்கே என்ன நடக்கிறது? வேளாண் சட்டங்கள் சிறந்தவை என ஒரு மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை. வேளாண் சட்டங்களை அமல்படுத்தியே தீருவோம் என மத்திய அரசு நினைப்பது ஏன்? மத்திய அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். 

    என்ன பேச்சுவார்த்தை நடக்கிறது என்பது எங்களுக்கு தெரியவில்லை. வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசு தயாரா? அப்படி செய்தால் விவசாயிகளுடன் பேச நாங்கள் குழு அமைக்கிறோம். வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க அரசு முடிவு எடுக்காவிட்டால் நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும்’ என்று தலைமை நிதிபதி பாப்டே எச்சரித்தார்.
    Next Story
    ×