search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    பிரதமர் மோடியை அவர் புகழ்ந்ததாக கூறி வைரலாகும் வீடியோ

    பிரதமர் நரேந்திர மோடியை அவர் புகழ்ந்ததாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    பிரதமர் நரேந்திர மோடியை நபர் ஒருவர் புகழ்ந்து பேசும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பிரதமர் மோடியை புகழும் நபர் பாகிஸ்தானை சேர்ந்த செய்தியாளர் என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    56 நொடிகள் ஓடும் வீடியோவில் நபர் ஒருவர், `உலகில் யாருக்கும் பாஜக பற்றி தெரியாது, பின் ஒருவர் கீழ் இருந்து மேலே வந்து அனைத்தையும் மாற்றினார். ஐந்து ஆண்டுகளில் ஓய்வின்றி உழைத்து வருகிறார். உடல்நல பாதிப்பும் அவரை நெருங்கவில்லை. மோடிக்கு இருமலோ, சளியோ ஏற்பட்டதே இல்லை.' 

    `நாட்டிற்காக தன்னை தியாகம் செய்து கொள்பவர்களுக்கு எந்த நோயோ அல்லது சக்தியோ பாதிப்பை ஏற்படுத்த முடியாது. இப்படிப்பட்ட இந்திய தலைவர் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்' என பேசுகிறார்.

     ஹர்ஷ்வர்தன் ஜெயின்

    வைரல் வீடியோ ஆய்வு செய்ததில், அதில் பேசிய நபர் ஹர்ஷ்வர்தன் ஜெயின் என தெரியவந்தது. மேலும் அவர் ஒரு பேச்சாளர் என ஆவார். வைரல் வீடியோவின் முழு பதிப்பு ஆகஸ்ட் 14, 2020 அன்று யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. 

    அந்த வகையில் வைரல் வீடியோவில் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய நபர் பாகிஸ்தான் நாட்டு செய்தியாளர் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. 

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×