search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை
    X
    சபரிமலை

    சபரிமலையில் பணிபுரிபவர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடு

    சபரிமலையில் பணியாற்றுபவர்கள் 2 வாரங்களுக்கொருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
    சபரிமலை :

    சபரிமலையில் தொற்று பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அங்கு பணியாற்றுபவர்களுக்கு மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

    அதுபற்றிய விவரம் வருமாறு:-

    சபரிமலை, பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் பணியில் உள்ள அரசு ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார், அர்ச்சகர்கள் மற்றும் ஓட்டல்கள், நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்பட அனைவரும் 14 நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து, அதற்கான சான்றிதழை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

    கொரோனா இல்லை என்பதற்கான நெகட்டிவ் சான்றிதழ் இல்லாதவர்கள் உடனடியாக சபரிமலை பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். அவ்வப்போது கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வசதியாக சபரிமலை, பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகிறது. கேரளாவை சேர்ந்த அனைவருக்கும் இலவசமாகவும், மற்ற மாநில தொழிலாளர்களுக்கு ரூ. 625 கட்டணத்திலும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×