search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயாவதி
    X
    மாயாவதி

    வேளாண் சட்டங்களை மத்திய அரசு மறுபரிசீலனை செய்வது நல்லது - மாயாவதி

    வேளாண் சட்டங்களை மத்திய அரசு மறுபரிசீலனை செய்வது நல்லது என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த விவசாயிகள், 'டெல்லி சலோ' போராட்டத்தை 4 நாட்களாகத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 

    இதற்கிடையே, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா விவசாயிகளிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அதில் டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் புராரி மைதானத்துக்குச் சென்ற பிறகு, டிசம்பர் 3-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும். பனிக்காலத்தில் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதால் அவர்களுக்குத் தேவையான வசதிகள் புராரி மைதானத்தில் செய்யப்பட்டுள்ளன. அதனால் அவர்கள் அங்கே செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இந்நிலையில், விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து வேளாண் சட்டங்களை மத்திய அரசு மறுபரிசீலனை செய்வது நல்லது என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த விவசாயம் தொடர்பான 3 சட்டங்கள் குறித்து நாடு முழுவதும் விவசாயிகள் ஆத்திரம் அடைந்துள்ளனர். இச்சட்டங்கள் நாட்டின் விவசாயிகளைக் கிளர்ந்தெழச் செய்துள்ளது.

    விவசாயிகளைக் கலந்தாலோசிக்காமல் இயற்றப்பட்டுள்ளதால் இச்சட்டங்கள் குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்வதே நல்லது என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×