search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாலு பிரசாத் யாதவ்
    X
    லாலு பிரசாத் யாதவ்

    பா.ஜ.க. எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய விவகாரம்: லாலு பிரசாத் யாதவ் மீது வழக்கு பதிவு

    சட்டப்பேரவைத் தலைவர் தேர்வு தொடர்பாக பா.ஜ.க. எம்எல்ஏ ஒருவருடன் பேரம் பேசும் செல்போன் உரையாடல் விவகாரத்தில் லாலு பிரசாத் யாதவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    பாட்னா :

    பீகாரில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் மாநில முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் சட்டப்பேரவைத் தலைவர் தேர்வு தொடர்பாக பா.ஜ.க. எம்எல்ஏ ஒருவருடன் பேரம் பேசும் செல்போன் உரையாடல் பதிவு பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பிர்பைன்டி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. லலன் குமாரிடம் “சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு நிறுத்தப்படும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு எதிராக வாக்களித்தால் விரைவில் எங்களுடைய ஆட்சி அமைந்தவுடன், இதற்கான பிரதிபலன் அளிக்கப்படும்“ இன்று லாலு பிரசாத் பேசுவதாக அந்த உரையாடல் அமைந்துள்ளது.

    பா.ஜ.க. மாநில தலைவா?களில் ஒருவரும் முன்னாள் துணை முதல்வருமான சுஷீல் குமார் மோடி, இந்த உரையாடல் பதிவை நேற்று முன்தினம் டுவிட்டரில் வெளியிட்டார்.

    இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய பா.ஜ.க. லலன் குமார் லாலு பிரசாத் யாதவ் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் லாலு பிரசாத் யாதவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×