search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு
    X
    குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு

    கொரோனாவில் இருந்து குணமடைந்தார் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று குணமடைந்தார்.
    புதுடெல்லி:

    குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கடந்த மாதம் 29-ம் தேதி வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். அப்போது கொரோனா பரிசோதனையும் எடுக்கப்பட்டது. அதில்  வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    அறிகுறிகள் இல்லாத நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாதால், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். அவரது மனைவிக்கு பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது.

    வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருந்த வெங்கையா நாயுடுவுக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்நிலையில், வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்த குடியரசு துணைத்தலைவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்குழுவினர் இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை செய்தனர். 

    பரிசோதனையில் வெங்கையா நாயுடுவுக்கு ’கொரோனா நெகட்டிவ்’ என முடிவு வந்தது.

    இது தொடர்பாக குடியரசு துணைத்தலைவர் செயலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ குடியரசுத்துணைத்தலைவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்குழுவினர் இன்று கொரோனா பரிசோதனை செய்தனர். அதில் கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளார். கூடிய விரைவில் அலுவலக பணிகளை மேற்கொள்ள உள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×