search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூரி ஜெகநாதர் கோவில்
    X
    பூரி ஜெகநாதர் கோவில்

    பூரி ஜெகநாதர் கோவில் ஊழியர்கள் 400 பேருக்கு கொரோனா

    பூரி ஜெகநாதர் கோவில் ஊழியர்கள் 400 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கோவிலை தற்போதைக்கு திறக்க முடியாது என அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.
    புவனேஸ்வர்:

    ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் ஆலயத்தில் பணியாற்றும் 400 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதால் கோவிலை தற்போதைக்கு திறக்க முடியாது என மாநில அரசு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்துள்ள ஒடிசா அரசு, பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலின் கருவறையில் போதுமான இடம் இல்லை என்று தெரிவித்துள்ளது.

    பக்தர்களுக்காக கோவில் திறக்க அனுமதிக்கப்பட்டால் தொற்று பரவ வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் கோவில் ஊழியர்கள் 351 பேருக்கும், 51 அதிகாரிகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×