search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்துறை மந்திரி அமித் ஷா
    X
    உள்துறை மந்திரி அமித் ஷா

    எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து உள்துறை மந்திரி அமித் ஷா டிஸ்சார்ஜ்

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா குணமடைந்ததையடுத்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
    புதுடெல்லி:

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவிற்கு ஆகஸ்ட் 2-ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது

    இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த நிலையில் ஆகஸ்ட் 14-ம் தேதி அவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார். மீண்டும் ஆகஸ்ட் 18-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த மாத இறுதியில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    இதற்கிடையே, உள்துறை மந்திரி அமித் ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த 12-ம் தேதி மீண்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், உள்துறை மந்திரி அமித் ஷா பூரணமாக குணமடைந்ததை அடுத்து, இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
    Next Story
    ×