search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிகிச்சை அளிக்கும் டாக்டர்
    X
    சிகிச்சை அளிக்கும் டாக்டர்

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 83809 பேருக்கு கொரோனா - 1054 பேர் பலி

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 83,809 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    உலக அளவில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் ஓயவில்லை. நாளும் அதிகரித்து வரும் புதிய நோயாளிகள் மற்றும் மரணங்களை தடுக்க முடியாமல் அரசுகள் கையை பிசைந்து நிற்கின்றன.

    தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கைவரப்பெறாததால் கொரோனாவின் வெறியாட்டத்தை வேடிக்கைதான் பார்க்க முடிகிறது.

    கொரோனா வைரஸ் இந்தியாவையும் நிலைகுலையச் செய்து வருகிறது. இங்கு தினசரி தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது.

    இந்நிலையில், இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 83 ஆயிரத்து 809 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரே நாளில் இவ்வளவு அதிகம் பேர் தொற்றுக்கு ஆளாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

    இதனால் நாடு முழுவதும் கொரோனாவிடம் சிக்கியவர்களின் எண்ணிக்கை 43 லட்சத்து 30 ஆயிரத்து 237 ஆக உயர்ந்தது. இது மத்திய, மாநில அரசுகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பதுடன், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தி இருக்கிறது.

    கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் நிகழ்ந்த கொரோனா பலி எண்ணிக்கை 1,054 ஆகும். இதன் மூலம் மொத்த பலி  எண்ணிக்கையும் 80,776 ஆக அதிகரித்து இருக்கிறது.

    தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 90 ஆயிரத்து 061 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 38 லட்சத்து 59 ஆயிரத்து 400 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
    Next Story
    ×